புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பேரவைத் தேர்தலில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க அதிமுக முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இதனிடையே தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதில், புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் கேட்கிற சீட்டை கொடுக்க முடியுமா? எங்களிடம் 10 சீட் கேட்டார், பிறகு 5 சீட் கேட்டார். பேச்சுவார்த்தை நேரடியாக இல்லை.
வேறு ஒருவர் மூலமாக கேட்டார். நாங்கள் இயலாது என்று தெரிவித்துவிட்டோம். போன முறை எங்கள் கூட்டணியில் அவர் இல்லை. 2021 சட்டப்பேரவைக் கூட்டணியில் அவர் இல்லை. கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அவர்கள் பெற்ற வாக்குகள் அடிப்படையிலேயே சீட் வழங்கப்படும். 31 தொகுதிகள் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறார். அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.
அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் முடியாது என்று தெரிவித்துவிட்டோம். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has responded to the allegations made by k. Krishnasamy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


