பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடுவார் என கடந்த சில நாள்களாக சொல்லப்பட்டு வருகிறது. வரும் 30ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி முன்எப்போதும் இல்லாத வகையில் கவனம் பெற்றுள்ளது.
அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணியில் பாமகவிற்கு தற்போது அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிட போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தோ்தலில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் களம் காண்கின்றன. இதனிடையே 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
அதில், முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
Summary
R.D. Shekhar is contesting again from the DMK constituency in Perambur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து களமாடும் 48 வேட்பாளர்கள்! சென்னையில் அதிகபட்சம்!!

பெரம்பூர் வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசப்! பழைய டெக்னிக் உதவுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



