மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பூர் வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசப்! பழைய டெக்னிக் உதவுமா?

பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசஃப் உள்ளனர்.

News image

தவெக தலைவர் விஜய் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 9:20 am

நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடுவதால், சென்னை பெரம்பூர் தொகுதி அதிக கவனம் பெறும் தொகுதியாக மாறியிருக்கிறது. இந்த தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

முன்பெல்லாம் பலருக்கும் எழுத்துக்கூட்டி மட்டுமே படிக்கத் தெரியும். இதனால் ஒரு வேட்பாளர் பெயரில், சில சுயேச்சைகளை எதிர்க்கட்சிகள் களமிறக்கி, உண்மையான கட்சி வேட்பாளருக்கு விழ வேண்டிய வாக்குகளை சுயேச்சைகளுக்குத் தெரியாமல் கிடைத்து, இதனால் வாக்குகள் பிரிக்கப்படும். இது மிக மிக பழைய டெக்னிக்.

ஆனால், இப்போது, பலரும் நன்கு படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக தவெக தலைவர் விஜய்க்கு வாக்களிக்கக் கூடிய இளைஞர்கள் படித்திருப்பார்கள் என்பதாலும், முன்கூட்டியே வாக்குப்பெட்டியில் எங்கே பெயர் மற்றும் சின்னம் இடம்பெறும் என்பது மக்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்பதாலும், இந்த பெயர் குழப்பங்கள் எல்லாம் பெரிய அளவில் பலனளிக்காது என்றே தேர்தல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

இது மிக மிக பழைய டெக்னிக். இருந்தாலும் என்ன நட்டமாகிவிடப்போகிறது என்று முன்னணி கட்சிகளே இந்த உக்திகளை இன்னமும் கடைப்பிடித்து வருகிறார்கள், சில சுயேச்சைகள், தங்களது விளம்பரத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.

பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், விஜய் என்ற பெயரில் தவெக தலைவர் தவிர்த்து இரண்டு பேரும், ஜோசப் என்ற பெயரில் விஜய் தவிர்த்து இரண்டு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து களத்தில் உள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் இரண்டு விஜய், 2 ஜோசப் என மொத்தம் 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜி. விஜய், கே. விஜய், எஸ். ஜோசப், எம். ஜோசப் ஆகியோரும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப்.6) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.