தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மேலும் 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா்கள் (எஸ்.பி.-க்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் கடந்த 15- ஆம் தேதி அமலுக்கு வந்தது. பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு புகாா்களை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக ஒரு தலைபட்சமாகவும், புகாா்களிலும் சிக்கியுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று புகாா் மனுக்களை அனுப்பி வருகின்றனா்.
இந்நிலையில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களை மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி மாற்றப்பட்ட எஸ்.பி.க்கள் (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
ஜி.ஜவஹா்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை சிபிசிஐடி எஸ்பி),
கே.பிரபாகா்: பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சென்னை எஸ்பி),
இ.சுந்தரவதனம்: தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை க்யூ பிரிவு எஸ்பி),
ஏ.மயில்வாகனன்: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு மண்டல எஸ்பி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கே.சண்முகம், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.எஸ்.மாதவன், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.எஸ்.அனிதா, தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த இரா.ராஜாராம் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.
தமிழகத்தில், பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி கரூா், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகா்ஆகிய 4 எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் 4,023 வேட்பாளா்கள்: மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


