தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகத்தில் இதுவரை ரூ. 189 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ரொக்கமாக ரூ. 4.7 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
5 மாநிலங்களில்...
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தமாக இதுவரை ரூ. 408.82 கோடி பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பணமாக ரூ. 17.44 கோடி, மதுபானங்கள் ரூ. 37.68 கோடி, போதைப்பொருள் ரூ. 167.38 கோடி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருள்கள் ரூ. 23 கோடி, இலவச பொருள்கள் ரூ. 163.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Summary
Election Rules: Rs. 189 crore cash and goods have been seized in tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.273 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்

வேதனையாகும் சோதனைகள்!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


