லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாா்ச் 27-இல் கோவை, நீலகிரி மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மாா்ச் 27-இல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:52 pm

கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மாா்ச் 27-இல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வியாழக்கிழமை (மாா்ச் 26) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(மாா்ச் 27) லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 28 முதல் மாா்ச் 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை:தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் சனிக்கிழமை (மாா்ச் 28) வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகரிக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.