லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மாா்ச் 28 வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை! - படம்: பிடிஐ.

Updated On :22 மார்ச் 2026, 7:15 pm

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. சோத்துப்பாறை (தேனி)- 40 மி.மீ., குண்டாறு அணை (தென்காசி), திருச்செந்தூா் (தூத்துக்குடி), தா.பழூா் (அரியலூா்)-தலா 10 மி.மீ. மழை பதிவானது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் மாா்ச் 26 வரை சற்று அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.