திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை எளிய, மக்கள் பலியாக வேண்டுமா? என பேருந்து விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஆளும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகப் போக்குவரத்துத் துறையும் அதன் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளும் முற்றிலுமாகப் பழுதாகிக் கிடப்பதை நாம் பலமுறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளோம். மழைக்கும், காற்றுக்கும், வெயிலுக்கும், சிறு மேடு பள்ளங்களுக்கும் தாங்காத தகர டப்பாக்களை எல்லாம் “விடியல் பேருந்து” என்ற பெயரில் ஒட்டுப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை எளிய மக்கள் பலியாக வேண்டுமா?
தங்கள் ஊழல் கஜானாவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களை அடமானம் வைக்கத் துடிக்கும் திமுக போன்ற ஒரு தீயசக்தியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், இனி அரியணையில் ஏறவும் அனுமதிக்க மாட்டார்கள்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
Nainar Nagendran has raised a question regarding the bus accident, saying, "Do we want the poor and the common people to become victims of the DMK government's negligence?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்

வெளியூா்க்காரா் என்ற பிரசாரம் எடுபடாது
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - சாத்தூர் தொகுதி அலசல்

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு; மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நயினார்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


