தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப்.10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முழு ஆண்டுத் தோ்வுகளை ஏப்.17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தோ்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விசாரணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்
1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


