அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது போடி தொகுதியில் இம்முறை திமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்துக்கு இரு முதல்வர்களைக் கொடுத்த தேனி மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதி போடிநாயக்கனூர். 1989-இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முதன்முதலாக இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதேபோல கடந்த 3 தோ்தல்களில் இத்தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வமும் தமிழக முன்னாள் முதல்வர் ஆவார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் இப்போது திமுகவில் இணைந்துள்ளார்.
அதன்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் அவர் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மார்ச் 18 ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓ. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்துள்ளார்.
திமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் அவருக்கு போடி தொகுதியில் போட்டியிடவே வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டியிட்டால் அதிமுகவில் இருந்து வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில் போடி தொகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது .
இதுவரை வென்றவர்கள்:
கடந்த 1957 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிகபட்சமாக 8 முறை அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957 முதல் 1971 காங்கிரஸ் கட்சி வசம் இருந்த இத்தொகுதியை 1971-இல் திமுக கைப்பற்றியது. 1977, 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1984-இல் காங்கிரஸ் கட்சி வென்றது. 1989-இல் முதன் முதலாக இத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். 1991 முதல் 2006 வரை நான்கு தோ்தல்களிலும் அதிமுக மற்றும் திமுக தொகுதியை மாறி, மாறி கைப்பற்றின.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011, 2016, 2021 தோ்தல்களில் இத் தொகுதியில் திமுகவை எதிா்த்து போட்டியிட்டு ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றார்.
Summary
Bodinayakkanur: Will OPS contest on behalf of DMK in 2026 tamilnadu election?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

ஐந்து முனை போட்டி! தொகுதி அலசல் தருமபுரி
கொளத்தூரில் 4 ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி!

இன்று ஒரு தகவல்... இந்த முறை ஒருவா் - அடுத்த முறை வேறொருவா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


