எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவையென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளான மார்ச் 15 ஆம் முதல் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செயல்முறைகள் முடியும் வரை இவ்விதிமுறைகள் அமலில் இருக்கும். இவ்விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசுத் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும்
அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தங்கள் பகுதி எண் (Part No) மற்றும் வரிசை எண் (Serial No) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, தங்களது வாக்குச்சாவடி இருப்பிடத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயரை அறிய இணையதள வாக்காளர் தேடல் வசதி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக உதவி மையம் மூலம் உதவி பெறலாம்.
மாநில / மாவட்ட அளவில் செயல்படும் கட்டணமில்லா எண்: 1800-4252-1950 மற்றும் மாவட்ட தொடர்பு மையம் எண் 1950 ஆகியவை 24x7 என்ற கால அளவில் செயல்படுகிறது. வாக்காளர்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குச்சாவடி இருப்பிடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்களை அறியலாம். மேலும் ஆன்லைன் புகார்களை தேசிய குறைதீர்ப்பு சேவை மைய இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.
வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்.
1. ஆதார் அட்டை.
2. MGNREGA பணி அட்டை.
3. புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக / வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்.
4. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை.
5. ஓட்டுநர் உரிமம்.
6. PAN அட்டை.
7. தேசிய மக்கள் தொகைப்பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
8. இந்திய கடவுச்சீட்டு.
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
10. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு / பொதுத்துறை நிறுவன ஊழியர் அடையாள அட்டை.
11. அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற / சட்டமன்ற / சட்டமேலவை உறுப்பினர் அடையாள அட்டை.
12. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை (சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை, இந்திய அரசு) ஆகியவையாகும்.
புதிய வசதிகள் என்னென்ன?
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய பின்வரும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன,
* வாக்குச்சாவடிகளில் கைப்பேசி பாதுகாப்பு அறை.
* தெளிவான வாக்காளர் தகவல் சீட்டு.
* வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படம் மற்றும் பெரிய எழுத்துருவில் வாக்குச்சீட்டு.
* அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள்.
* வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் வேட்பாளர் முகாம் அமைத்தல்.
* ECINET – ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை தளம்.
* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% இணையவழி ஒளிபரப்பு.
* வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட புதிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
Summary
Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has announced the identification documents required to vote in the upcoming assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்

வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



