எதிர்வரும் தமிழக பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை கண்காணிப்பதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் உணவு பொருள்களின் விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், 2 இட்லி - ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350, டீ - ரூ. 12, காபி - ரூ. 18 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விலைப்பட்டியல் அடிப்படையிலேயே தேர்தல் செலவீனம் கணக்கிடப்படும். தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறைப்படி இணைய வழியில் (சுவிதா எனும் செயலியில்) 48 மணி நேரத்துக்கு முன்பு விண்ணப்பித்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடத்துவதற்கு அனுமதி பெறலாம்.
பிரசாரத்தின்போது சாப்பாடு வழங்கினால் அது எந்த வகை உணவு என்பதைப் பொறுத்து அதற்கான செலவு பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின விலைப்பட்டியல் விவரம்:
அதன்படி அசைவ உணவு - ரூ.350, சைவ உணவு - ரூ.110, வெஜ் பிரியாணி - ரூ.50, வெரைட்டி ரைஸ் - ரூ.45, இட்லி (2 மட்டும்) - ரூ.40, சப்பாத்தி, பூரி ( 2) - ரூ.60, பொங்கல் - ரூ.50, வடை - ரூ.15, மினரல் வாட்டர் - ரூ.15, மட்டன் பிரியாணி - ரூ.180, சிக்கன் பிரியாணி - ரூ.110, டீ - ரூ.12, காபி - ரூ.18 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7, வெஜிட்டபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ் ரூ.50, ஸ்நாக்ஸ் (உலர் பழம் தவிர்த்து) 100 கிராமுக்கு ரூ.50, இனிப்பு 100 கிராம் ரூ. 90 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல வாகனங்களுக்கும் பிரசார செலவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு பிளாஸ்டிக் இருக்கை ஒன்றுக்கு வாடகை ரூ.11, மேஜைக்கு வாடகை ரூ.110, குஷன் இருக்கைக்கு ரூ.165, தனி சோபாவுக்கு ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடிக்கு... எட்டுக்கு நாலடி அளவு கட்சிக் கொடி ஒன்றுக்கு ரூ. 40, வாழை மரம் ஒன்று ரூ. 750, பட்டாசு வெடித்தால் ஆயிரம் வாலா-க்கு ரூ. 650, மேள தாளம் 4 மணி நேரம் ரூ. 6,500, குதிரைகளைப் பயன்படுத்தினால் ரூ. 6,000, கரகாட்டம், மயிலாட்டம் என 3 மணி நேரத்துக்கு ரூ.11,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
The Election Commission of India has released a price list to facilitate monitoring of candidates' expenses during election campaigns.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

தோ்தல் செலவின கையேட்டில் பிரியாணி இல்லையா?

தோ்தல் செலவின கையேட்டில் விடுபட்ட அசைவ பிரியாணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



