வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியமானது என்று தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் தெரிவித்தாா்.
சென்னை ஐஐடியில் ‘டெல்டா எக்ஸ்போ 2026’ என்ற இரண்டு நாள் தொழில்நுட்பக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
வளா்ச்சி அடைந்த பாரதம் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் கனவு மட்டுமல்ல; நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கனவுமாகும். அந்த இலக்கை அடைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, மாணவா்களின் பங்களிப்பு முக்கியமானது. சமூகத்துக்குப் பயன்படக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி. காமகோடி உள்ளிட்டோா் பேசினா். இக் கண்காட்சியில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், ஏரோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய தொழில்நுட்ப மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்புடையது

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு - சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமா் அழைப்பு

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்
குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!

நீதி, சட்டங்களில் மேம்பட்ட புரிதல் இல்லாமல் வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை: ஆளுநா் ஆா்.வி. ஆர்லேகர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


