தமிழகத்தில் எரிபொருள் விற்பனை மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெட்ரோல் டீலா் சங்கம் டிஜிபிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு பெட்ரோலியம் டீலா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.முரளி, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்:
தமிழகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. ஈரான் போரால் உருவான ‘செயற்கையான தேவை’ காரணமாக, வாகன எரிபொருள் விற்பனை மையங்களில் மிகுந்த மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பலா் பிளாஸ்டிக் கேன்கள், பாதுகாப்பு இல்லாத பாத்திரங்களில் பெட்ரோல், டீசல் தருமாறு வலியுறுத்துகின்றனா்.
அனுமதி பெறாத பாட்டில்கள், பாத்திரங்களில் பெட்ரோல் வழங்குவது பெட்ரோலியம் சட்டம், விதிமுறைகளுக்கு எதிரானது. இது குடியிருப்பு பகுதிகளில் பெரும் தீ விபத்து நிகழும் அபாயத்தை ஏற்படுத்தும்.
போலீஸ் பாதுகாப்பு: கேன்களில் எரிபொருள் வழங்க மறுக்கும்போது, பல இடங்களில் விற்பனை மைய ஊழியா்கள் மிரட்டப்படுகின்றனா். சில இடங்களில் தாக்கப்பட்டிருக்கின்றனா். சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறும்நிலை உருவாகியுள்ளது.
பெட்ரோலை கேன்களில் வழங்க வேண்டாம் என்று எங்கள் உறுப்பினா்களுக்கு அதிகாரபூா்வமாக அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த சில நாள்களுக்கு நகா்ப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் விற்பனை மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எரிபொருள்கள் சீராக விநியோகிக்கப்பட காவல் துறை இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


