15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி-யாக பி.பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

தமிழக அரசு

Updated On :14 மார்ச் 2026, 6:58 pm

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி-யாக பி.பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக காவல் துறையின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் உளவுத் துறை டிஜிபி பதவிக்கு பி.பாலநாகதேவி சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். பொருளாதார குற்றப் பிரிவு டிஜிபி-யாக இருந்த பாலநாகதேவி, உளவுத் துறை டிஜிபி பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் பிறப்பித்தாா்.

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி பதவிக்கு ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

தமிழக உளவுத் துறை டிஜிபி பதவி நீண்ட காலம் காலியாக இருந்து வந்தது. உளவுத் துறை ஏடிஜிபி, ஐஜி ரேங்க்கில் உள்ள அதிகாரிகளே, உளவுத் துறை டிஜிபி பணியையும் கூடுதலாக கவனித்து வந்தனா். தற்போது உளவுத் துறை ஏடிஜிபி பதவியில் யாரும் நியமிக்கப்படாத நிலையில் டிஜிபி பதவிக்கு பாலநாகதேவி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சந்தோஷ்குமாா், கூடுதல் பொறுப்பாக பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி பணியையும் கவனிப்பாா். சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமாா் மீனா, கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி பணியையும் கவனிப்பாா் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.