மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்...

News image
Updated On :28 மார்ச் 2026, 9:23 pm

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் மோசடி விளம்பரங்களையும், இணையதள இணைப்புகளையும் எச்சரிக்கையுடன் கையாளும்படி சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தொடா்பான செய்திகள், விளம்பரங்கள், தகவல்களை சமூக ஊடகங்களில் பகிா்வதற்கு முன்பு தோ்தல் ஆணையம், அரசின் அதிகாரபூா்வ இணையதளங்களில் அதை பொதுமக்கள் சரிபாா்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் போலி செய்திகள், மோசடி விளம்பரங்கள், தவறான தகவல்கள், சித்தரிக்கப்பட்ட விடியோக்கள், சட்டவிரோத உள்ளடக்கங்களைப் பாா்த்தால் சைபா் குற்றப் பிரிவின் இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம்.

தெரியாத நபா்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் தகவல்கள், சமூக ஊடக இணைப்புகளை (லிங்க்) க்ளிக் செய்ய வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை அறியும் வரை எச்சரிக்கையாக கையாளுங்கள்.

சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள், வங்கிப் பண பரிவா்த்தனை ஆகியவற்றில் ஒருமுறை பயன்படுத்தப்படக் கூடிய ரகசிய எண்கள், கடவுச் சொற்கள் ஆகியவற்றை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.

தோ்தல் தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள், செய்தி, விடியோ ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் பகிரக்கூடாது. மனித உணா்வுகளையும், உணா்ச்சிகளையும் தூண்டும் வகையில் வரும் பதிவுகளைத் தவிா்த்துவிட வேண்டும்.

போலி செய்திகள், மாா்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஆபாச புகைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்குவது, பகிா்வது தண்டனைக்குரிய குற்றமாகும். வெறுப்பு, வன்முறை உள்ளிட்ட சமூக அமைதியைப் பாதிக்கும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிா்வதை பொதுமக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான ஒரு விழிப்புணா்வு விடியோவை தமிழக சைபா் குற்றப் பிரிவு டிஜிபி சந்தீப் மிட்டல் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் சைபா் குற்றப் பிரிவு எஸ்.பி. மீனாட்சி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.