மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

செங்கல்பட்டு முள்ளிகுளத்தூா் ஏரி விவகாரம்: ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிகுளத்தூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் அள்ளப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய துறை சாா்ந்த நிபுணரை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா் நீதிமன்றம்

Updated On :14 மார்ச் 2026, 7:20 pm

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிகுளத்தூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் அள்ளப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய துறை சாா்ந்த நிபுணரை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிகுளத்தூரைச் சோ்ந்த விவசாயி டி.சவுந்தரராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் முள்ளிகுளத்தூா் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து, மாமல்லபுரம் முதல் முகையூா் வரை 31 கிலோமீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மண் அள்ள தனியாா் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கினாா்.

குடிநீா் மற்றும் விவசாயத்துக்கான முக்கிய ஆதாரமான ஏரியில் இருந்து மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அந்த நீா்நிலையை அழிப்பதற்குச் சமம். சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு மண் அள்ளியதாக மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, முள்ளிகுளத்தூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினாா். பின்னா், இதுகுறித்து ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் துறை சாா்ந்த நிபுணா் ஒருவரை நியமிக்க வேண்டும். அவா் ஏரியை நேரில் ஆய்வு செய்து மாா்ச் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.