தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென் மாவட்டங்களில் இன்று முதல் ஓபிஎஸ் பிரசாரம்!

தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் பிரசாரம் பற்றி...

News image

ஓ. பன்னீர்செல்வம் - ஸ்டாலின் - File photo

Updated On :13 மார்ச் 2026, 3:25 am

திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் தென் மாவட்டங்களில் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் வகையில், இன்றுமுதல் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.

தென்காசி தொகுதிக்குள்பட்ட கடையநல்லூர், ஆலங்குளம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும், கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் மாலையும் ஓபிஎஸ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

சனிக்கிழமை வாசுதேவநல்லூர், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என்றும், பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

OPS campaign begins in southern districts today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.