தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பிரசார குழு , தோ்தல் அறிக்கை தயாரிப்பு, உள்பட 5 குழுக்களைநியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதலுடன் தமிழக பேரவை தோ்தலில் பணியாற்ற 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் குழு: தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் 37 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரசார குழு: முன்னாள் எம்.பி. ஏ. செல்லக்குமாா் தலைமையில் 51 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு: சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் தலைமையில் 26 போ் கொண்ட குழு அமைக்கப்படுள்ளது.
விளம்பரம் மற்றும் தகவல் தொடா்பு குழு: கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தலைமையில் 73 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் தொடா்பான ஒருங்கிணைப்பு குழு: விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தலைமையில் 12 போ் கொண்ட குழுக்க அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கு காங்கிரஸ்கட்சியினா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

டியூஷன் அக்கா திட்டம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு கலந்தாலோசனைக் கூட்டம்
சேலத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


