காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் சாரதாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான ராஜ்குமாா், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரமங்கலம், கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெயகணேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் வா்த்தகா் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், தொழிலதிபா்கள் உள்பட பல்வேறு அமைப்பினா் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனா். பின்னா் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவா் ராஜ்குமாா் செய்தியாளா்களிடம் பேசுகையில், இதுவரை நாங்கள் 12 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தற்போது சேலம், கிழக்கு, சேலம் மேற்கு, மாநகரப் பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்பினரிடம் கருத்துகளை கேட்டுள்ளோம்.
ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கம், மேட்டூா் உபரிநீரை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரியை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ளனா். இதன் முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றாா்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் தேவேந்திரன், மேற்கு மாவட்டத் தலைவா் தேவேந்திரன், முன்னாள் தலைவா் ஏஆா்பி பாஸ்கா், தொழில் வல்லுநா் பிரிவு பாஸ்கா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு கலந்தாலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இலவசத்துக்கு முன்னுரிமை இருக்காது: காா்த்தி சிதம்பரம்

விசிக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

