சென்னை: கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மத்திய மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட்டும், மற்ற மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.5.40-க்கு தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.
இதனிடையே கூடங்குளம் அணு மின்நிலயத்தில் தலா 1,000 மெகாவாட் திறனில் 3 மற்றும் 4-ஆவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு யூனிட் ரூ.5.91-க்கு விற்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சிலா் கூறியதாவது:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் யூனிட் ரூ.4-க்கு மின்வாரியத்துக்கு கிடைக்கிறது. இதனால், கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய இயலாது.
குஜராத்தின் காக்ராபா் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்த மாநிலத்துக்கு யூனிட் ரூ.5.60-க்கு வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், விலையைக் குறைத்து வழங்க மாநில அரசு கோரிக்கை விடுத்ததன்பேரில், யூனிட் ரூ.4.50-க்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதேபோல, கூடங்குளம் 3 மற்றும் 4-ஆவது அணு உலை மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தி மத்திய மின் துறையின் தென் மாநில மின்சார குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து விலையைக் குறைக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

மேற்காசிய போரால் அத்திவாசியப் பொருள்கள் விலையில் அசாதாரண மாற்றமில்லை: மத்திய அரசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எம்.பி. வலியுறுத்தல்

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


