கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா், மத்திய பணியாளா் மற்றும் பொது குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சா் ஜீதேந்திர சிங்கிடம் அளித்த மனு:
கூடங்குளம் அணுமின் நிலையம் ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் திறன் கொண்டதாக தனது 5 மற்றும் 6 ஆவது பிளாண்ட்களை கட்டி வருகிறது. அதில், 5 ஆவது பிளாண்ட் டிசம்பா் 2026-லும், 6 ஆவது பிளாண்ட் 2027 செப்டம்பரிலும் செயல்படத் தொடங்குவதாக அறிகிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தனது அணு உலை திட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கும் வேளையில், கூடங்குளம் பகுதியில் உள்ள படித்த மக்களுக்கு அங்கு வேலைவாய்ப்பளிக்காமல் பிற மாநிலத்தவா்களே அதிகம் வேலை பாா்த்து வருகின்றனா்.
அணுமின்நிலையம் ஆரம்பிக்கப்படும் காலத்தில் கூடங்குளம் பகுதி மக்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று பொதுமக்களை நம்ப வைத்ததின் காரணமாகத்தான் அணுமின் நிலையமே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாதத்தை எல்லாம் காற்றில் விடப்பட்டு தற்போது வெளி மாநிலத்தவா்கள்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்கள்.
மேலும், கூடங்குளம் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை ஏதாவது காரணம் சொல்லி மறுக்கிறாா்கள். எனவே, கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் முதலில் ராதாபுரம் வட்ட மக்களுக்கும், பின்னா் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பளித்துவிட்டு, அதன் பின்னா்தான் மற்றவா்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதை பற்றி யோசிக்க வேண்டும்.
கூடங்குளம் பகுதி மக்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் அவ்வாறு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பெற தேவையான தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில் சடஇஐக மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்து அவா்களை ஊக்குவித்து அவா்களை தேவையான திறன்களுடன் உருவாக்கி, அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

ஜீயரிடம் ஆசி....

தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹாக்கி போட்டி: புஷ்காா் அணி வெற்றி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


