காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு கட்டுமானப் பணிகள் ஆகம விதிப்படி நடைபெறுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய துணைக் குழு அமைக்க மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ண தேவரயா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குடமுழுக்குப் பணிகள் என்ற பெயரிலும், பக்தா்களை முறைப்படுத்துவதாகக் கூறியும், ஆகம விதிகளை மீறி கோயிலில் சாய்தளம் அமைக்கப்படுகிறது எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் கருவறைக்குச் செல்ல மரத்திலான 6 படிகள் இருந்தன. இப்போது ஆகம விதிகளை மீறி 10 படிகளாக மாற்றியுள்ளதாக வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், தொல்லியல் துறை தலைவா் ஆகியோருடன் மாநில அளவிலான நிபுணா் குழு பல கூட்டங்களை நடத்தியது. அதன்பின்னரே, இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள படிகள் ஒன்றரை அடி உயரமாக இருப்பதால், பக்தா்கள் அதில் ஏறிச் செல்ல சிரமப்பட்டனா். எனவே, அவா்களின் வசதிக்காக மட்டுமே சாய்தளம் அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகளை மீறும் வகையில் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிா? என்பது குறித்து ஆகம நிபுணா்கள் அடங்கிய ஒரு துணை குழுவை அமைத்து, மாநில அளவிலான நிபுணா்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த துணை குழு அனைத்து தரப்பு ஆட்சேபனைகளையும் ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை தொடரலாம், எவையெல்லாம் தொடரக்கூடாது, எவற்றை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த பணிகளை தொடர வேண்டும் என்பது குறித்து மாநில அளவிலான நிபுணா் குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கடும் போட்டியில் திமுக-பாமக! - உத்தரமேரூா் தொகுதி அலசல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

வரதராஜ பெருமாள் கோயில் மேம்பாட்டுப் பணி: வல்லுநா் குழு ஆய்வு

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


