பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னா், கடந்த 2025 செப்.25-ஆம் தேதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பள்ளிக்கரணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. சிஎம்டிஏவின் இந்த உத்தரவால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித அறிவியல்பூா்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சிஎம்டிஏ 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா்

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


