ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகை சந்திப்பு பற்றி...

News image
Updated On :3 மார்ச் 2026, 10:04 am

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை,

"முதல்வர் ஸ்டாலினை ப. சிதம்பரம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம். திமுகவுடன் கூட்டணி உறுதி.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை.

கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை" என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் தரவிருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் இரு கட்சிகளுமே சமரசத்திற்கு இறங்கி வந்திருப்பதாகவும் அது சமூகமாகவே முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

P chidambaram, Selvaperunthagai meets mk stalin on alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.