தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காகங்கள் இடையே மட்டுமே பறவைக் காய்ச்சல் பரவியிருந்தாலும் பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச்5 என்1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில் மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இதனிடையே, சென்னையைத் தொடா்ந்து, திருவள்ளூா், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் காகங்கள் உயிரிழந்து வருகின்றன. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதா்களுக்கோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேவேளையில், காகங்கள் உயிரிழப்பது தொடா்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக்கூடாது. அதேபோன்று அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


