மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் முக்கியமான திட்டத்தின் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளருடன் மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே. வாசன் பேசுகையில், "பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்பாக ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றுவது. பிரதமரின் உரையானது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரண்டாவதாக, சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ஒரு முக்கியமான திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளார். இது மாநிலத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பைத் தரும்.
இதன் மூலம், மாநில அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவைக் காட்டுகிறது.
பிரதமரின் இன்றைய பயணம், கூட்டணிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியமானது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை உறுதிசெய்து, மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
பிரதமா் வருகையையொட்டி, மதுரை மாநகா், மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 3,600-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டுள்ளனா்.
Summary
The Central Government has consistently supported the state’s progress, says GK Vasan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

மாற்றத்திற்கானது தேசிய ஜனநாயகக் கூட்டணி : பிரதமர் மோடி

தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்!
தமாக வேட்பாளர்கள் யார்யார்? ஜி.கே. வாசன் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



