ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆளுநரை பேரவைத் தலைவர் சந்தித்தது ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

Tamil Nadu Minister for Higher Education P. Viswanathan

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - ENS

Published On :30 ஜூன் 2026, 11:32 am IST

வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களில் முழு ஆதரவைத் தருவதாக ஆளுநர் கூறியதாக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார், அவருடன் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் சென்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ஆளுநர் சந்திப்பு குறித்து கூறுகையில்,

"ஆளுநரை நேற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், நானும் மர்யாதை நிமித்தமாக சந்தித்தோம். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆளுநரைச் சந்திப்பது மரபு. மேலும் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். நேரிலும் அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

வருகிற காலங்களில் தொடரும் சட்டப்பேரவை தொடர், மிகவும் நேர்த்தியாகவும் மக்களின் பிரச்னைகளை பேரவையில் முறையாக விவாதிக்கும் வகையிலும் நடைபெறும் எனவும் அதற்கு எங்களுடைய முழு ஆதரவைத் தருவோம் என்றும் ஆளுநரிடம் கூறினோம். ஆளுநரும் இந்த அரசு சிறப்பான அரசு, வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகச்சிறப்பாக நடைபெறும். அதற்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தருவதாகக் கூறினார்" என்றார்.

Summary

Why did the Speaker meet the Governor, Minister Viswanathan press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.