ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

'இதுல என்ன இருக்கு?'- பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை குறித்து உயர்கல்வி அமைச்சர் கருத்து!

அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் சர்ச்சை கருத்து

Minister Viswanathan reaction on live streaming of TVK event at a government school

அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை - X

Published On :11 ஜூலை 2026, 1:40 pm IST

அரசுப் பள்ளியில் கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பியதில் என்ன இருக்கிறது? எல்லோருமே இதுபோன்று செய்திருக்கிறார்கள் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக முதல்வர் ஜோசப் விஜய், நேற்று கரூர் சென்றார். கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பள்ளியின் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கையில், "அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும், விசாரிக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் இதுபோன்று நடந்திருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. எல்லோரும் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான். இதற்கு மேல் கேள்விகளுக்கு இடமில்லை" என்று கூறிச் சென்றார்.

உயர்கல்வித் துறை அமைச்சரின் இந்த பதில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Summary

Minister Viswanathan reaction on live streaming of TVK event at a government school

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.