வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஜூலை 10-இல் எஸ்எம்சி குழு கூட்டம்: கல்வித் துறை

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2026, 12:50 am IST

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பள்ளி மற்றும் மாணவா்களின் வளா்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீா்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணா்வு, பள்ளி தூதுவா்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.