தமிழகத்தின் தில்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார், வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நியமனம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். வெங்கட நாராயணா முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர். அதனால் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல; ஆகவே அந்தப் பொறுப்பை முதல்வர் தனது நம்பிக்கைக்குரிய தோழருக்கு வழங்கியிருக்கிறார் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இது அவர்கள் (தவெக) கட்சி விவகாரம். அரசுப் பதவிதான் என்றாலும்கூட அந்த அதிகாரம் முதல்வருக்கு இருக்கிறது. இதனால் எந்தப் பாதிப்பும் நேரப்போவதில்லை என்ற கருத்தை அவர் வலியுறுத்தி இருக்கிறார் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Summary
VCK leader and Member of Parliament Thirumavalavan stated on Sunday (June 28) that the Chief Minister possesses the authority regarding the appointment of Tamil Nadu's Special Representative in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி பிரதிநிதி நியமனத்தை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தில்லி பிரதிநிதி நியமனத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும்: ஈ.ஆா். ஈஸ்வரன்

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK





