ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெகவுடன் மதிமுக? திமுக கூட்டணியிலிருந்து விலகல்?

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தகவல்...

Vaiko meets Chief Minister Vijay

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :26 ஜூன் 2026, 12:00 pm IST

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, தவெகவுக்கு ஆதரவாக மதிமுக கருத்துகளை வெளியிடுவதால், திமுக கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, மதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், கலந்துகொண்ட உறுப்பினர்கள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெக கூட்டணியில் இணையும் பட்சத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் உயர்நிலைக் குழுவில் இல்லாததால் கலந்துகொள்ளவில்லை என்று கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்த மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வீட்டுக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக மதிமுக கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவை கட்டாயப்படுத்தியதாக வைகோ தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை கடந்த வாரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய வைகோ, பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

Summary

Is MDMK leaving the DMK alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.