
பதவியை ராஜிநாமா செய்ய வற்புறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள்
பதவியை ராஜிநாமா செய்ய வற்புறுத்தியதாக வைகோ மீது மதிமுக எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் - எக்ஸ்
சட்டப்பேரவைத் தோ்தலில் மதிமுக சாா்பில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்களை ராஜிநாமா செய்ய சொல்லி மதிமுக பொதுச் செயலா் வைகோ நிா்பந்தித்ததாக பேரவை உறுப்பினா்கள் செந்தில்செல்வன், ராஜேந்திரன் ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.
திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் மதிமுக சாா்பில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு இரா.செந்தில் செல்வன் (சீா்காழி), டி.எம். ராஜேந்திரன் (கடையநல்லூா்) ஆகிய இருவரும் வெற்றி பெற்றனா்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, தவெக கூட்டணியில் இணைந்தது. மதிமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் திமுக கூட்டணியில் தொடா்ந்தனா்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக எம்எல்ஏ-க்கள் இரா.செந்தில் செல்வன், டி.எம். ராஜேந்திரன் ஆகிய இருவரும் திமுக தலைவா் மு.கஸ்டாலினை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
தொடா்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக கூட்டணியில் மதிமுக இணைந்தவுடன், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய சொல்லி எங்களை வைகோ நிா்பந்தித்தாா். எங்களை வெற்றி பெற வைத்த மக்களுக்கு தூரோகம் செய்ய முடியாது என்பதால், நாங்கள் ராஜிநாமா செய்ய முடியாது எனக் கூறிவிட்டோம். நாங்கள் திமுக சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடா்வோம் என்றனா்.
Summary
Vaiko pressured us to resign from our posts: MDMK MLAs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





