கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பேரவையில் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் இன்று(ஜூன் 23) பதிலளித்து சட்டப்பேரவையில் பேசினார்.
அப்போது பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடியது தவறு, தேசிய கீதம் இரண்டு முறை பாடியது தவறு. இதுபோன்ற ஒரு நிகழ்வு சட்டப்பேரவையில் நடந்ததே இல்லை. அந்த மரபை மாற்றிவிட்டீர்கள், அந்த மாநில உரிமைப் போராளிகளை, அந்த மரபு காக்கும் போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்.
கடந்த 2021 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் வெளியிட்ட விழாவில், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு இரண்டாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவித்தார்கள்.
அது ஞாபகம் இல்லையா? தமிழை இரண்டாவது இடத்தைத் தள்ளியது யார்? இரண்டாவது முறையும் தேசிய கீதம் பாடப்பட்டது. அவைக்குறிப்பிலும் இருக்கிறது, சந்தேகம் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “மொழி மொழி என்று கூறி இரட்டை வேடம் போட மாட்டோம், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர் ஈவில்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதை டெவில்ஸ் பேசக் கூடாது” என்றார்.
Summary
Chief Minister C. Joseph Vijay raised a question in the Assembly as to why the National Anthem was sung twice at the unveiling ceremony of the Kalaignar portrait.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம்! முதல்வர் கலைஞரிடம் விஜய் வழங்கினார்!

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!
தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46





