அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை! பேரவைத் தலைவர்

தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது பேரவைத் தலைவர் பதில்...

News image

கோப்புப் படம் - TN Assembly

Updated On :22 ஜூன் 2026, 1:08 pm IST

திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை தேவையில்லை என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

சென்னையில் பள்ளி நிகழ்வொன்றில் மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி பங்கேற்ற நிலையில், விழாவில் தன்னை புறக்கணித்ததாக எம்எல்ஏ பல்லவி கூறினார். விழா நெறிமுறைகளின்படி, தான் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் எம்எல்ஏ வரும் வரை காத்திருந்து நிகழ்ச்சியைத் தொடங்கியதாகவும் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.

ஆனால் மேயர் பிரியா மீது தவெக எம்எல்ஏ பல்லவி புகார் கொடுத்தார்.

இந்த புகார் குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று அவையில் விளக்கமளித்தார்.

அவர் பேசுகையில்,

"கடந்த 4.6.2026 வியாழக்கிழமை திருவிக நகர் தொகுதிக்குள்பட்ட ஒரு அரசுப்பள்ளி நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றுவது குறித்த மரபு நெறிமுறைகள் மேற்பட்டதாக திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவி ஒரு மனு கொடுத்தார். அதனை நன்கு படித்துப் பார்த்து ஆய்வு செய்தேன். அதுபற்றி சில கருத்துகளை அறிவுறுத்தல்களை வழங்குகிறேன்.

சட்டப்பேரவைக்குரிய கண்ணியத்தையும் மாண்பினையும் அதேபோல சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உண்டான உரிமைகளையும் மரபு நெறிமுறைகளைக் (Protocol) காப்பது எனது கடமையாகும்.

அரசால் வெளியிடப்பட்டுள்ள மரபு நெறிமுறைகளின்படி அரசமைப்புத் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரையுள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வழங்குவது என உருவாக்கப்பட்டது. அதன்படியே அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருவிக நகர் நிகழ்வில் மரபு நெறிமுறைகள் தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ நடந்த நிகழ்வு. அது இனிவரும் காலங்களில் தொடராது என்று நம்புகிறேன். அதனால் அந்த மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ வேறு நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகளிலும் நடைபெறும் விழாக்களில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய மரபு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதுபற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க அரசு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுகிறேன்" என்று கூறினார்.

Summary

No action taken on the petition submitted by TVK MLA Pallavi: TN Assembly Speaker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.