பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

கோவை: சிறுவன் கொலை வழக்கில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள், தாய்க்கு ஆயுள் தண்டனை

கோவையில் 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image

ராஜதுரை, திவ்யா.

Updated On :22 ஜூன் 2026, 1:23 pm IST

கோவையில் 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (38). தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கும், திவ்யா (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அபிஷேக் (6) என்ற மகனும், ஹரிசினி (3) என்ற மகளும் இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு திவ்யாவுக்குப் பிற ஆண்களுடன் ஏற்பட்ட தொலைபேசி பழக்கத்தை அருண் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவரைப் பிரிந்த திவ்யா, தனது குழந்தைகளுடன் கோவை சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அங்குள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்த திவ்யாவுக்கு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜதுரை (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறியது. திவ்யாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரையும் திவ்யாவும் தனிமையில் சந்திப்பதற்கு, 6 வயது சிறுவன் அபிஷேக் இடையூறாக இருப்பதாகக் கருதியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கையும், 3 வயது பெண் குழந்தையையும் அடிக்கடி கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

கட்டையாலும், கரண்டியைக் சூடுபடுத்தியும் சிறுவனை வசிப்பிடத்திலேயே சித்திரவதை செய்துள்ளனர். ஒருமுறை தனது தந்தை அருண் பார்க்க வந்தபோது, "அம்மாவும் வீட்டுக்கு வரும் அங்கிளும் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள், என்னை உங்களுடனே அழைத்துச் செல்லுங்கள்" என்று சிறுவன் அபிஷேக் கதறி அழுதுள்ளான். அதற்கு அருண், தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டின் பணிகள் முடிந்ததும் இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆறுதல் படுத்தியுள்ளார்.

கடந்த 2020இல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள கடைக்கு அருகில் வைத்து ராஜதுரையும் திவ்யாவும் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கை குச்சியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த பொது மக்கள் அவர்களைக் கண்டித்துள்ளனர். இந்த கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து, சிறுவன் கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பலியானான். சிறுவன் இறந்துவிட்டதை அறிந்தவுடன் ராஜதுரையும் திவ்யாவும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ராஜதுரை மற்றும் திவ்யாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைனர். இந்த வழக்கு கோவை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் (எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம்) விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்தார்.

தண்டனை விவரங்கள் தனியாக அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 6 வயது சிறுவனைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், தன் சொந்த மகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, அதற்கு உடந்தையாக இருந்த பெற்ற தாய் திவ்யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

Summary

Coimbatore court awards double life term to man, life sentence to mother for the murder of her young son.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.