தூத்துக்குடியில் வானில் சுழல் காற்று உருவான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தூத்துக்குடியில் கோடை கால வெயிலின் தாக்கம் சற்றே ஓய்ந்துள்ளது. சில வாரங்களாக அங்கு தொடர்ச்சியாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
கடுமையான வெயிலால் வறண்டு கிடந்த பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், குளங்கள், ஆறுகள் இந்த மழையால் பயனடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வாகைகுளத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் வானில் சுழல் காற்று (Tornado) உருவானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் சுழல் காற்று என்பது அரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கூட பெருமளவில் சுழல் காற்று (Tornado) அதிகமாக உருவானதில்லை. அப்படி உருவானாலும் அவை மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் உருவாகியுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடியில் அரிய நிகழ்வாக உருவான சுழல் காற்றை விடியோ மூலம் அங்குள்ள மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Summary
Videos of a whirlwind forming in the sky over Thoothukudi are going viral on social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்.ஜே. பாலாஜி சர்ச்சை! ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை?

வைரலாகும் நடிகர் ராம் சரண் பாதுகாவலர் கெவின் குண்டா! யார் இவர்?

யார் பெத்த புள்ளையோ... வைரலாகும் எஸ்டிஆர் விடியோ!
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




