தமிழக காவல் துறையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): சந்தீப் மிட்டல் - தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி (ஆயுதப்படை டிஜிபி). ஆா்.தினகரன்-ஆயுதப்படை ஏடிஜிபி (ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஏடிஜிபி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வாலுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்பு ஆணையத் தலைவா் பணி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவாலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரும் இரு தினங்களுக்கு முன்பு ராஜிநாமா செய்தனா் என்பது குறிப்பிடதக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!
சென்னை மாநகராட்சியில் 43 அலுவலா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


