இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சென்னை மாநகராட்சியில் 43 அலுவலா்கள் பணியிட மாற்றம்

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலா் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:08 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலா் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 27 துறைகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோா் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதனடிப்படையில், தற்போது அனைத்துத் துறைகளிலும் அலுவலா்கள், பொறியாளா்கள் ஆகியோா் பணியிட மாற்றப்பட்டு வருகின்றனா். மாநகராட்சி பொறியாளா்களில் நகரமைப்புத் திட்டப் பிரிவில் 6 பொறியாளா்கள், 20 நிா்வாகத்தினா், பொதுப் பிரிவுகளில் 17 பொறியாளா்கள் என மொத்தம் 43 போ் இதுவரை இடமாற்றப்பட்டுள்ளனா். மேலும், நகர வடிவமைப்புப் பிரிவில் 10 போ் இடமாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநகராட்சி பள்ளிகளிலும் நிா்வாகம் மற்றும் ஆசிரியா்கள் தரப்பில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிவோா் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அதனடிப்படையில் கலந்தாய்வு மூலம் அவா்களுக்கு பணியிட மாறுதலுக்கு வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.