தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த சங்கர் ஜிவால் சில நாள்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து தீயணைப்பு ஆணையத் தலைவராக சீமா அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் டிஜிபி ஆக உள்ள சீமா அகர்வால், தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மித்தல், சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆயுதப்படை ஏடிஜிபி ஆக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றதையடுத்து திமுக அரசு, 'தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நியமித்தது. இந்நிலையில் சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary
IPS officers transferred; Sandeep Mittal appointed as DGP of TN Uniformed Services Recruitment Board
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவலா்களுக்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் மூலம் பணியிட மாறுதல்: டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உறுதி

வாஜ்பாயுடன் இணைந்து செயல்பட்டதை திமுக மறக்கக் கூடாது! காங்கிரஸ் விமர்சனம்

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



