மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

இருமொழிக் கொள்கையே தொடரும்! கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்! ஆளுநர் உரை

தமிழக சட்டப்பேரவை உரையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பேசியது...

News image
Updated On :18 ஜூன் 2026, 10:34 am IST

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என சட்டப்பேரவை உரையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில்,

"1968 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்", என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசியக் கல்விக் கொள்கையை கொள்கையின்படி மும்மொழிக் கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமமாகும். மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு. தேசியக் கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை பொதுப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

உண்மையான கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அதன் கற்பித்தல் திறனையும் உயர்த்துவதிலேயே அடங்கியுள்ளது. இதற்கேற்ப, மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கு இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமன்றி, உயர்கல்வித் துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களை இந்த அரசு கொண்டு வரும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்கப் பெறும்" என்று பேசினார்.

Summary

Two-language policy will continue: Governor address in the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.