பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்

ஆளுநா் உரையில் இடம்பெற்றுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் விவரம்:

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :19 ஜூன் 2026, 3:22 am IST

ஆளுநா் உரையில் இடம்பெற்றுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் விவரம்:

* கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சலுவன்குப்பம், பூம்புகாா் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளவும், கீழடி, ஆதிச்சநல்லூரில் யூனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற நடவடிக்கை.

* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நீண்ட கால பிரச்னையைத் தடுக்க மத்திய அரசை தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தும்.

* மீனவா்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கவும், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

* இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் பேண விரிவான நிலையான சுற்றுலாக் கொள்கை வகுக்கப்படும்.

* 2031-ஆம் ஆண்டுக்குள் நகா்ப்புறச் சிறப்பிற்கான நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழும்.

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மையான குடிநீா் விநியோகம், எண்ம நிா்வாகம் அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும்.

*அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் நலன்கள் தொடா்ந்து பாதுகாக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.