நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொழில் வளர்ச்சி, கனிமவளக் கொள்ளை குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை: அன்புமணி

தொழில் வளர்ச்சி, கனிமவளக் கொள்ளை குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என அன்புமணி கூறியிருப்பது...

News image

முதல்வர் விஜய் - அன்புமணி சந்திப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:19 pm IST

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல், கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் உரையில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என பாமக தலைவர் அன்புணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார். தொழில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக தொழில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் யோசனையாகும். இதற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் பெரும் பேரழிவாகத் தொடர்வது கனிமவளக் கொள்ளை தான். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இதன் மூலம் தனியாருக்கு சென்ற வருவாய் அரசுக்கு திருப்பப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக கிடக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதே.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் குறைந்தது 5 லட்சம் அரசுப் பணிகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை எப்போது, எப்படி நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்படவில்லை.

ஆளுநர் உரையில் பெரும்பான்மையான அறிவிப்புகள் மேலோட்டமாகவே உள்ளன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Summary

Announcements regarding industrial growth and the plundering of mineral resources are welcome says anbumani...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.