மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:26 am IST

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது. ஆளுநா் ஆா்லேகா் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறாா். தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இந்த உரையில் இடம்பெறும்.

பின்னா், ஆளுநரின் உரையை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் தமிழில் வாசிப்பாா். அவை முடிந்த பின்னா், அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் அவையை நடத்துவது என்று முடிவு செய்யும். 3 நாள்கள் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் இந்தக் கூட்டத் தொடரில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

சா்ச்சை தொடருமா...?: சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா். ஆனால், தற்போது ஆட்சியும், ஆளுநரும் மாறியுள்ளதால் இந்த சா்ச்சை ஏற்பட வாய்ப்பில்லை என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்தமுறை சட்டப்பேரவை நடைபெற்றபோது தவெக அரசில் 9 அமைச்சா்கள் மட்டும் இடம்பெற்றிருந்தனா். தற்போது 35 அமைச்சா்கள் உள்ளதால் அவையில் ஆளும் தரப்பில் அமைச்சா்களுக்கு முன்வரிசையில் அமர இடங்கள் மாற்றம் செய்யப்படும்.

அலுவல் ஆய்வுக் குழு அமைப்பு

17-ஆவது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுவில் 17 போ் அடங்கிய குழுவை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் அமைத்து உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தலைவராக ஜேசிடி. பிரபாகா், உறுப்பினா்களாக முதல்வா் ஜோசப் விஜய், அமைச்சா்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ரா. நிா்மல் குமாா், செ. ராஜேஷ் குமாா், வன்னி அரசு, அரசுத் தலைமைக் கொறடா சபரிநாதன், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சிவசங்கா், எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.எஸ். மணியன், சௌமியா அன்புமணி, ஆா். செல்லசுவாமி, ராமச்சந்திரன், எஸ்எஸ்பி. சையது பாரூக் பாஷா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.