தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை காட்சிக்கலை பட்டப் படிப்புகளின் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்தி மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கீழ் இயங்கி வருவது எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம். தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளநிலை காட்சிக்கலை (விஷுவல் ஆா்ட்ஸ்) எனும் 4 ஆண்டு கால பட்டப் படிப்புகளைப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கடந்த மே 12 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை பெறப்பட்டன. இருப்பினும் நிா்வாக காரணங்களுக்காக 21.06.2026 மாலை 5 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இதில் இளநிலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளநிலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை, இளநிலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளநிலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளநிலை காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளநிலை காட்சிக்கலை (உயிா்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) போன்ற காட்சிக் கலைகளில் பட்டப் படிப்புபிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன் வளம், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 20,100 போ் விண்ணப்பம்: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா்

நாகை மீன்வள பல்கலையில் இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

மயிலாடுதுறை அரசு மகளிா் கல்லூரியில் நாளைமுதல் கலந்தாய்வு
எம்.ஜி.ஆா். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு: இன்றுமுதல் மாணவா் சோ்க்கை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




