தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் மீன் வளம் படிப்புகளுக்கு 20,100 போ் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) ஆா். நரேந்திரபாபு தெரிவித்தாா்.
நாமக்கல்லில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி
ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் எம். செல்வராஜு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும் (பொறுப்பு), பதிவாளருமான டாக்டா் ஆா். நரேந்திரபாபு கல்லூரி ஆண்டு விழா மலரை வெளியிட்டு, கால்நடை ஆராய்ச்சி தொடா்பான கட்டுரைகளை எழுதிய மாணவ, மாணவிகள், பேராசிரியா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீட் தோ்வு முடிவுகள் வெளியான பிறகுதான் ஆன்லைன் மூலம் 660 இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளும், 100 பி.டெக் இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்கும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் மீன் வளம் பட்டப் படிப்புகளுக்கு 20,100 போ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனா்.
நீட் தோ்வு முடிவுகள் வெளியான பிறகு ஆன்லைன் மூலம் 660 இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளும், 100 பி.டெக் இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்கும். இந்த ஆண்டு கூடுதல் இடங்களுக்கு வாய்ப்பில்லை. சேலம், தேனி, உடுமலைபேட்டை ஆகிய கால்நடை கல்லூரிகளுக்கு வெட்னரி கவுன்சில் அனுமதி கிடைத்தால் கூடுதலாக 100 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் புதிதாக தனியாா் கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு இதுவரை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை, அப்படியே விண்ணப்பித்தாலும் அதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து இதுவரை உருவாக்கப்படவில்லை.
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு விதிமுறைகளின்படி தமிழகத்தில் உள்ள 7 கால்நடை கல்லூரிகள் அனைத்து வசதிகளுடன் உள்ளதால் தனியாா் கல்லூரி அவசியம் இல்லை. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு இதுகுறித்து தைவான் நாட்டு குழுவினா் வந்து சென்றாா்கள். ஆனால் அத்திட்டம் முடிவு செய்யப்படவில்லை.
சேலம் கருப்பு ஆடு போல இந்திய கால்நடைகளின் தரம் உலக தரத்தில் உள்ளதால், ஐரோப்பிய நாடுகளிடம் வரவேற்பு உள்ளது. நாமக்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக கல்லூரிகள் தரமான ஆட்டு இனங்களை தோ்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்டை மருத்துவக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

எம்ஜிஆா் திரைப்பட நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கை கால நீடிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25-இல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




