நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது பற்றி...

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:26 pm IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ள 4 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடைக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோா் வெற்றி பெற்றனா். பின்னா், இவா்கள் நால்வரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

இதற்கு முன்னதாகவே, அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததாக இவர்கள் நால்வர் மீதும் அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், இவர்களின் ராஜிநாமாவை ஏற்பதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாா் நிலுவையில் இருக்கும் நிலையில், அதை தவிா்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்ய முடியுமா, அந்த ராஜிநாமாவை ஏற்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

மேலும், ”எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சித்தாவல் தடைச் சட்டத்தையும், மக்கள் தீா்ப்பையும் நீா்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவா்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இவ்விரு மனுக்களையும் நாளை மறுநாள் (ஜூன் 17) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Summary

AIADMK MLAs resign: Madras High Court to hear the matter on June 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.