பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகளால் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிர்த்து திரிசூர், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
எதிர்வழித்தடத்தில், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலானது (16127) வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு, திரிசூர் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஜூன் 20, 24 தவிர்த்து) 75 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணியால் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் 75 நிமிஷம் காலதாமதமாகப் புறப்படும்.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் மேற்கண்ட தினங்களில் 75 நிமிஷங்கள் கால தாமதமாக காலை 8.30 மணிக்குத்தான் புறப்படும்.
ஜூன் 24-இல் மாற்று வழியில் இயக்கம்:
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 24-ஆம் தேதி சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகர்கோயில் டவுன், குளித்துறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லாம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்
பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் - திருச்சி - கான்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, கான்பூர் சென்ட்ரல் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (01927) வரும் 17, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். எதிர்வழித்தடத்தில், திருச்சி - கான்பூா் சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயிலானது (01928) வரும் 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The route of the Guruvayur train has been diverted due to engineering works.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

திருச்சி - காரைக்கால் டெமு ரயில்: ஜூன் 6, 7-இல் வழக்கம்போல் இயக்கப்படும்

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து: சில ரயில்களின் வழித்தடம் மாற்றம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





