விஜய் தலைமையிலான தவெக அரசில், இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் எஸ். ரமேஷ் உடன் புகைப்படம் எடுக்க பலரும் ஆர்வத்துடன் வந்து செல்வதால், அவர்களுக்கு க்யூஆர் கோடு அடிப்படையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பலரும், நாள்தோறும் அமைச்சர் ரமேஷ் அலுவலகம் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால், அமைச்சரின் அலுவலகத்தில் கூட்ட நெரிசலும், அமைச்சரின் அலுவலக அறைக்குள் தள்ளுமுள்ளும் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க, அமைச்சரின் அலுவலகத்துக்குள், புகைப்பட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டு, அமைச்சரை சந்திக்க வருவோர் மற்றும் அலுவலக கூட்டங்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாள்தோறும் எண்ணற்ற தவெக தொண்டர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அமைச்சர் அறைக்குள் பலரும் செல்போன் கொண்டு செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகைப்பட நிபுணர்கள் புகைப்படம் எடுத்துவிடுவார்கள். உள்ளே அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் வெளியே வந்து க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து தங்களது புகைப்படங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அமைச்சருடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் உடனுக்குடன் டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொண்டர்கள் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். நுழைவு வாயிலுக்கு அருகே இந்த க்யூஆர் குறியீடு வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் ரமேஷ், பொறியியல் பட்டதாரி. இவருக்கு தொழில்நுட்பத்தில் இருக்கும் ஆர்வம் மற்றும் அமைச்சர் அலுவலகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், இந்த தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Want to take a photo with the Minister for Hindu Religious and Charitable Endowments? Scan the QR code!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்தியாளர்களைச் சந்தித்துதான் ஆட்சி நடத்த வேண்டுமா? அமைச்சர் நிர்மல் குமார்

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்துக்கு பணம் பெற்ற அா்ச்சகா் உள்பட 5 போ் மீது நடவடிக்கை

அமைச்சர் ரமேஷிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள்!

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



