தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image

டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு - ENS

Updated On :14 ஜூன் 2026, 3:21 am IST

தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஜூன் 15 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடையும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூா் ஆகிய பகுதிகளில் தலா 70 மி.மீ.மழை பதிவானது. மேலும், தருமபுரி, தலைஞாயிறு (நாகை), பாலமோா் (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி)-60 மி.மீ., கோமுகி அணை (கள்ளக்குறிச்சி), காக்காச்சி (திருநெல்வேலி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி)-50 மி.மீ., கெடாா் (விழுப்புரம்), குருந்தன்கோடு, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பாலக்கோடு (தருமபுரி), மைலாடி (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), கொட்டாரம், (கன்னியாகுமரி), மணலூா்பேட்டை (கள்ளக்குறிச்சி) - 40 மி.மீ. மழை பதிவானது.

7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரங்களில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 102.56, மீனம்பாக்கம் (சென்னை) - 102.2, திருச்சி - 101.3, நுங்கம்பாக்கம் (சென்னை) - 100.76, நாகை, தஞ்சாவூா் - 100.4 என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 14, 15) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chance of heavy rain in the Delta region today.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.